கனடா இடைத்தேர்தல் - பெரும்பான்மையை பெற்ற மார்க் கார்னி அரசு

#PrimeMinister #Election #Parliament #Canada #Lanka4 #parties
Prasu
2 months ago
கனடா இடைத்தேர்தல் - பெரும்பான்மையை பெற்ற மார்க் கார்னி அரசு

நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுள்ளன.

கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.

நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை ஆளும் கட்சி நாடவேண்டியிருக்கும். 

ஆளும் லிபரல் கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும். 

அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4