அவசர பணிகளுக்காக நாளை காலை வீட்டை விட்டுப் புறப்பட விசேட சுபநேரம்

#SriLanka #Lanka4 #work #Special Day #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
அவசர பணிகளுக்காக நாளை காலை வீட்டை விட்டுப் புறப்பட விசேட சுபநேரம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையில்) முதன்முறையாக உள்ளடக்கப்பட்டுள்ள 'அவசர கடமைகளுக்காக புறப்படுவதற்கான' சுபநேரம் நாளை அதிகாலை இடம்பிடித்துள்ளது.

இதன்படி, நாளை அதிகாலை 5.38 மணிக்கு பொன் நிற ஆடை அணிந்து, தயிர் கலந்த பாற்சோறு மற்றும் உளுந்து கலந்த தின்பண்டங்களை உட்கொண்டு, வடக்கு திசை நோக்கி அவசர கடமைகளுக்காகப் புறப்படுவது சிறந்தது என சுபநேரப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல, ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6.27 மணிக்கு வெள்ளை நிற ஆடை அணிந்து, பால் கலந்த சோறு மற்றும் தின்பண்டங்களை உட்கொண்டு வடக்கு திசை நோக்கிப் புறப்படுதல் சிறந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.01 மணிக்கு மஞ்சள் நிற ஆடை அணிந்து கிழக்கு திசை நோக்கி மரம் நடுகையில் ஈடுபடுதல்.

இம்முறை புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடுவோரைக் கருத்திற்கொண்டே இந்த விசேட சுபநேரம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4