இலங்கைக்கு மசகு எண்ணெய் கப்பல் வருகை!!
மத்திய கிழக்கிலிருந்து 9,750 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று (17) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நாட்டுக்கு வருகை தரும் முதலாவது மசகு எண்ணெய் கப்பல் இதுவெனக் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போதைய எரிபொருள் கையிருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மற்றுமொரு எரிபொருள் தாங்கிக் கப்பல் இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதோடு அடுத்த மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய் ஏந்திய கப்பலொன்று வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய் ஏற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், அங்கிருந்து இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்ய சுமார் 45 நாட்கள் எடுக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )