அரசாங்கச் சலுகைகளைச் சிறுதோட்ட உரிமையாளர்கள் நிராகரிப்பதற்கான காரணங்கள்
#SriLanka
#government
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 days ago
அரசாங்கத்தினால் சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள உர மானியம் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை எனவும், தமக்குத் தேவை மானியம் அல்ல, உரத்தின் விலைக்குறைப்பே எனவும் தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், உர மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் யதார்த்தமற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
உர மானியத்தைப் பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 150 கிலோ தேயிலைக் கொழுந்து பறித்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பல தோட்ட உரிமையாளர்களால் இந்த இலக்கை எட்ட முடிவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )