உக்ரைனில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு - 5 பேர் உயிரிழப்பு

#Murder #Ukraine #Lanka4 #GunShoot #Hostages
Prasu
2 hours ago
உக்ரைனில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு - 5 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நபர் பல்பொருள் அங்காடியில் பணயக்கைதிகளைப் பிடித்து வைத்து இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், அவரைக் கைது செய்ய முயன்றபோது அவர் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகரின் குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயங்கள் மற்றும் அதிர்ச்சியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

"பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கீவ் தாக்குதல்தாரி கொல்லப்பட்டுவிட்டார்," என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத்" தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் தெரியவில்லை என்றும் அனைத்துச் சூழ்நிலைகளும் கண்டறியப்பட்டு வருகின்றன என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!