இயற்கை அழகை இரசிக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!
#SriLanka
#Beauty
#ImportantNews
#Natural
#L4
Lakhi
2 months ago
நுவரெலியா கிரகரி வாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அன்று இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒரு படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும் படகில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும், நுவரெலியா காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் விரைவாக மீட்கப்பட்டனர்.
எவருக்கும் உயிராபத்து ஏற்படாத போதிலும், மீட்கப்பட்டவர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து, இரண்டு படகோட்டிகளையும் நுவரெலியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே