பிரான்ஸின் அணு ஆயுத திட்டத்திற்கு ரஷ்யா எச்சரிக்கை

#France #government #Russia #Lanka4 #Warning #Nuclear
Prasu
1 month ago
பிரான்ஸின் அணு ஆயுத திட்டத்திற்கு ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யா தனது முதன்மை இலக்கு பட்டியியலில், பிரான்சின் அணு குடை (Nuclear Umbrella) திட்டம் வைக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஐரோப்பாவின் மீது அணு குடை என அழைக்கப்படும் அணு ஆயுத பாதுகாப்பை அமைக்கும் திட்டத்தை பிரான்ஸ் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டால், ரஷ்யாவின் முதன்மை இலக்குப் பட்டியலில் பிரான்சின் அணு குடை சேர்க்கப்படும் என ரஷ்ய துணை வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் குருஷ்கோ எச்சரித்துள்ளார்.

பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களை அணு சக்தி இல்லாத மற்ற ஐரோப்பிய நாடுகளில் நிறுவும் வாய்ப்பு குறித்து எங்கள் இராணுவம் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4