இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவார் - ஹங்கேரி பிரதமர்

#PrimeMinister #Arrest #Israel #Lanka4 #Hungary #Netanyahu
Prasu
2 hours ago
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவார் - ஹங்கேரி பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு பயணம் செய்தால் கைது செய்யப்படுவார் என அந்நாட்டு பிரதமர் பீட்டர் மாக்யார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) ஹங்கேரி விலகுவதை நிறுத்திவைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

எனவே, நவம்பர் 2024 முதல் காசாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் நெதன்யாகு அந்நாட்டிற்குள் நுழைந்தால், ஹங்கேரிய அதிகாரிகள் அவரைக் கைது செய்யக் கடமைப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ஒரு நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், அந்த நீதிமன்றத்தால் தேடப்படும் நபர் ஒருவர் நமது எல்லைக்குள் நுழைந்தால், அவர் கட்டாயம் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!