யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை, மகன் பலி!

#SriLanka #Jaffna #Death #Police #Accident #Hospital #morning
Soruban
2 months ago
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை, மகன் பலி!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.

உந்துருளியுடன் கனரக வாகனம் மோதி, இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், உந்துருளியில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களின் உடலங்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4