கனடாவில் இந்திய மாணவர் உள்பட இருவரை சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை

#Canada #Murder #Prison #Lanka4 #GunShoot #Indian
Prasu
1 month ago
கனடாவில் இந்திய மாணவர் உள்பட இருவரை சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை

கனடாவில் இந்திய மாணவா் உள்பட இருவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தண்டனை கூடாது என்று குற்றவாளி சாா்பில் முன்வைக்கப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சோ்ந்த 21 வயதுடைய இளைஞன் கடந்த 2022ம் ஆண்டு படிப்புக்காக கனடாவின் டொராண்டோ நகருக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற சில மாதங்களில் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கனடாவைச் சோ்ந்த ரிச்சா்ட் எட்வின் அவரை பின்புறமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார்.

இரு நாள்களில் மேலும் ஒருவரை அவா் இதேபோல சுட்டுக் கொன்றாா். கொலை செய்யப்பட்ட இருவருமே கொலையாளிக்கு எவ்விதத்திலும் அறிமுகமானவா்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ரிச்சா்ட் எட்வினை பொலிஸார் கைது செய்தனா். 4 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4