எரிபொருள் தட்டுப்பாடு - விமான பயணங்களை ரத்து செய்த லுஃப்தான்சா
#Flight
#Airport
#Fuel
#Lanka4
#service
#Jet
Prasu
3 hours ago
ஜெட் எரிபொருளின் அதிகரித்து வரும் விலையைச் சமாளிக்கும் பொருட்டு, லுஃப்தான்சா குழுமம் சுமார் 20000 பயணங்களை இரத்து செய்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லுஃப்தான்சா நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டிலைன் இயக்கும் குறுகிய தூர விமானப் பயணங்களே முதன்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 27 விமானங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன.
மேற்படி விமான இரத்துக்கள் மே மாதத்தின் இறுதிவரை தொடரும் என்றும், இது தொடர்பில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )