பென்டகன் அருகே இரண்டு பேருந்துகள் மோதி விபத்து - 23 பேர் காயம்
#Accident
#Hospital
#America
#Bus
#Lanka4
Prasu
1 hour ago
பென்டகன் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளனர்.
ஓம்னி ரைடு மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் கனெக்டர் போக்குவரத்துப் பேருந்துகள் சற்று முன்னதாக மோதிக்கொண்டன.
காயமடைந்தவர்களில் 18 பேரை மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக அவசரப் பணியாளர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர்.
ஐவருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த 23 பயணிகளில் பத்து பேர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து காரணமாகப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டன.
(வீடியோ இங்கே )