கனடாவில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவில் பக்டீரியா தொற்று

#Canada #Food #Lanka4 #Warning #Bacteria
Prasu
5 hours ago
கனடாவில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவில் பக்டீரியா தொற்று

கனடாவின் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் விற்பனை செய்யப்படும் முட்டை தயாரிப்புகளில் 'சல்மோனெல்லா' பக்டீரியா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில், அந்தத் தயாரிப்புகளை மீளப்பெறுமாறு கனடிய உணவு ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

'சுப்ரீம் லிக்விட் ஹோல் எக்ஸ்' மற்றும் 'சுப்ரீம் லிக்விட் எக் வைட்ஸ்' ஆகிய திரவ நிலை முட்டை தயாரிப்புகள் இந்த எச்சரிக்கை அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஒரு கிலோ கிராம் எடையுள்ள பொதிகளில் விற்கப்படும் இந்தத் தயாரிப்புகளில், மார்ச் 24 முதல் மே 7 வரையான காலாவதி திகதியைக் கொண்ட தொகுதிகள் (Lots) மீளப்பெறப்படுகின்றன. 

இந்தத் தயாரிப்புகள் பொதுவாக உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுபவை என்று தெரிவித்துள்ளது. 

மீளப்பெறப்பட்ட இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தவோ, விற்கவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என நுகர்வோரை கனடிய உணவு ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!