அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு போப் லியோ கண்டனம்

#Death #America #Lanka4 #condemn #penalty #Pope #DonaldTrump
Prasu
1 hour ago
அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு போப் லியோ கண்டனம்

அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விரிவுபடுத்த முயன்று வருகிறது. 

ஊசி மூலம் மரண தண்டனை அளிப்பதில் உள்ள மருந்து தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, துப்பாக்கியால் சுடுதல் மற்றும் மின்சார நாற்காலி போன்ற முறைகளை மீண்டும் கொண்டு வர அமெரிக்க நீதித்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு போப் லியோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து போப் லியோ வெளியிட்டுள்ள செய்தியில், “ஒவ்வொரு மனித உயிரும் கருவில் உருவானது முதல் புனிதமானது. 

உயிர் வாழும் உரிமையே மற்ற அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படை. ஒரு சமூகம் மனித உயிரின் புனிதத்தைப் பாதுகாக்கும்போது மட்டுமே செழிப்படையும். 

சிறைச்சாலைகள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இடங்களாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!