அஞ்சல் திணைக்களத்தில் 6 இலட்சம் டொலர் மாயம்: உயர்மட்ட விசாரணைகளுக்கு உத்தரவு!
இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமக்குரிய கொடுப்பனவு கிடைக்கவில்லை என அமெரிக்கத் அஞ்சல் சேவை விடுத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், அஞ்சல் திணைக்களத்தின் ஊடாகச் செலுத்தப்பட்ட சுமார் 600,000 அமெரிக்க டொலர் நிதியே இவ்வாறு காணாமல் போயுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )