ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கிய மாணவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

#SriLanka #Jaffna #Arrest #Student #Crime #ImportantNews #Teacher #L4
Lakhi
4 hours ago
ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கிய மாணவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கியமை தொடர்பில் 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 16 ஆசிரியர்கள் அடங்கிய குழு நிழற்படத்தை குறித்த மாணவர்கள் அவமதிப்புக்குள்ளாக்கும் வகையில் தயார் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்தAi நிழற்படத்தை வட்ஸ்அப் ஊடாகவும் மாணவர்கள் பகிர்ந்துள்ளதாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலை நிர்வாகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் அவர்கள் பிரசன்னப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். அதன்படி, மாணவர்களை எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!