40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா?

#Health #Women #Food #Egg #Fish #Oil #ImportantNews #L4
Lakhi
1 month ago
40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா?

பெண்களின் ஆரோக்கியம் என்பது வயது அதிகரிக்கும் போது ஆண்களை விட விரைவாக பின்னடைவை சந்திக்கும். அதனால்தான் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.

1. ஆலிவ் எண்ணெய்

images/content-image/2024/04/1777525277.jpg

சமையலில் ஆலிவ் எண்ணெயை வழக்கமாகப் பயன்படுத்தி வந்தால், 40 வயதிற்குப் பிறகும் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதது எளிமையாக இருக்கும்., ஆலிவ் எண்ணெய் மற்ற பல எண்ணெய்களை விட ஆரோக்கியமான கொழுப்பு அமைப்பைக் கொண்டிருப்பதுடன், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட தாவர அடிப்படையிலான சேர்மங்களான பாலிஃபீனால்கள் நிறைந்து காணப்படுகிறது. வயதாவதோடு தொடர்புடைய நாள்பட்ட நோய்களின் வளர்ச்சிக்கு அழற்சி ஒரு பொதுவான காரணியாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவதில் ஆலிவ் எண்ணெய் ஆற்றல் காட்டுகின்றது.

2. முட்டை

images/content-image/2024/04/1777525293.jpg

அனைவருமே தினசரி உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நல்லது. முட்டை புரதங்களின் மிகச்சிறந்த மூலமாகும். தசைச் சீரமைப்பு, ஹார்மோன் செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றிற்கு உங்கள் உடலுக்குத் தேவைப்படும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அனைத்தையும் முட்டைக் கொண்டுள்ளன. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, முட்டைகள் தசை உறுதித்தன்மையை பராமரிக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் துணைப்புரிகின்றது.

3. நட்ஸ் வகைகள்

images/content-image/2024/04/1777525311.jpg

நட்ஸ் வெறும் ஆரோக்கியமான மற்றும் எளிதான சிற்றுண்டி மட்டுமல்ல; அவை எண்ணற்ற உடல்நலப் பலன்களுடன் தொடர்புடையவை. அடிக்கடி நட்ஸ் வகைகளை சிற்றுண்டியாக உண்பது, வகை 2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

4.தயிர்

images/content-image/2024/04/1777525338.jpg

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தினமும் தயிரை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரிகின்றது. இது குடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துதிலும் ஆற்றல் காட்டுகின்றது. இதில் செரிவாக இருக்கும் கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள், 40 வயதிற்குப் பிறகு ஏற்படும் எலும்புகளின் வலிமை பிரச்சினை மற்றும் ஹார்மோன் சமநிலையை சரிசெய்ய துணைபுரியும்.

5.சிக்கன் அல்லது மீன்

images/content-image/2024/04/1777525358.jpg

பெண்கள் தினமும் உணவில் சிக்கன் அல்லது மீனை உட்கொள்ள வேண்டியது அவசியம் சைவம் சாப்பிடும் பெண்களும் இதற்கு நிகரான சத்துக்களை கொண்ட தாவர உணவுகளை நிச்சயம் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்பற்ற சிக்கனின் மார்பு பகுதியில் புரதச்சத்து மிகுதியாகவும், கலோரி அளவு குறைவாகவும்இருப்பதால், உடல் வலிமையை மேம்படுத்த இது துணைப்புரியும். மேலும் நாளாந்த புரதத்தேவையை பூர்த்தி செய்ய உதவும். மீன் வகைகளில், குறிப்பாக சால்மன், மத்தி மற்றும் அயிலை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது பெண்களின் இதயத்தை ஆரோக்கியமாகவும், சருமத்தைப் பொலிவுடனும், மூட்டுகளை வலிமையாகவும் வைத்திருப்பதில் ஆற்றல் காட்டுகின்றது. 40 வயதுக்கு மேல் பெண்கள் இந்த உணவுகளில் டீதாவது ஒன்றையேனும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4