யாழில் திரண்ட மக்கள்: சுதந்திர மனித உரிமை அமைப்பின் மே தினப் போராட்டம்.
இலங்கையின் 137-வது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சுதந்திர மனித உரிமை அமைப்பினால் (Freedom Human Rights Organization) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கவனயீர்ப்புப் பேரணி இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்தப் பேரணியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுலோகங்கள் ஏந்தப்பட்டிருந்தது, இனங்களைக் கடந்து தொழிலாளர் வர்க்கத்தின் பலத்தை பறைசாற்றுவதாக அமைந்தது "தொழிலாளர்களைப் பாதுகாப்போம்", "தொழில் முயற்சியைப் பாராட்டுவோம்" போன்ற பாதுகாப்பு வாசகங்கள் முழங்கப்பட்டன.
உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் சுதந்திரமான வாழ்வுரிமைக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கத்தோலிக்க மதகுருமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் இந்தப் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவை வழங்கினர்.
தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தும் சுலோக அட்டைகளை ஏந்தி, யாழ். பொது நூலக முன்றலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தன.
(வீடியோ இங்கே )