பிரித்தானியாவில் வசிக்கும் யூத சமூகங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

#PrimeMinister #Attack #Lanka4 #England #Safety #Lanka4 swiss tamil news #L4 #Jewish #community
Prasu
1 month ago
பிரித்தானியாவில் வசிக்கும் யூத சமூகங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் கடந்த வாரம் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் யூத சமூகத்தை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை கைது செய்தனர்.

இந்நிலையில் பிரித்தானியாவில் யூத சமூகங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய பிரதமர், பிரித்தானியாவில் யூத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காவலர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் இருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4