IPL M45 - ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
#Lanka4
#IPL
#T20
#Cricket
#hyderabad
#Kolkatta
#2026
#L4
Prasu
3 hours ago
2026 ஐ.பி.எல் தொடரின் 45வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய ஐதராபாத் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
ஐதராபாத் அணி சார்பில், டிராவிஸ் ஹெட் 61 ஓட்டங்களும் இஷான் கிஷன் 42 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 166 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா 18.2 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின் ஆலன் 29 ஓட்டங்களும் ரகானே 43 ஓட்டங்களும் ரகுவன்ஷி 59 ஓட்டங்களும் குவித்தனர்.
(வீடியோ இங்கே )