ட்ரம்பின் நம்பிக்கை - கச்சா எண்ணெய் விலை சரிவு!

#SriLanka #Oil #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #DonaldTrump
Thamilini
4 hours ago
ட்ரம்பின் நம்பிக்கை - கச்சா எண்ணெய் விலை சரிவு!

உலக சந்தையில் இன்று (06) தொடர்ந்து இரண்டாவது நாளாக கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

 மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் தடையின்றி மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணமாகும். 

 அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை $1.52 (1.38%) குறைந்து $108.35 ஆக உள்ளது. 

 அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை $1.50 (1.47%) குறைந்து $100.77 ஆக உள்ளது. மேலும், ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை US$105.97 ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!