மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவு அமைச்சர் சீனா பயணம்!
#SriLanka
#China
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று காலை (06) சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை வந்தடைந்துள்ளார்.
சீனாவின் உயர்மட்டத் தலைவர்களுடனான ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய நிலவரங்கள் மற்றும் உலகளாவிய மூலோபாயப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு போரின் தீவிரத்தாலும், குறிப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றி உருவாகியுள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் அபாயங்களாலும் உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வரும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
(வீடியோ இங்கே )