யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் தகுதியுள்ளோருக்கு வாய்ப்பு - பதிவாளர் நியமன அறிவிப்பு.

#SriLanka #Jaffna #Lanka4 #Notice #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் தகுதியுள்ளோருக்கு வாய்ப்பு - பதிவாளர் நியமன அறிவிப்பு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோரி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் (மாவட்டச் செயலாளர்) மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அதன்படி, நல்லூர் பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களில் நிலவும் குறித்த பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் மொழி உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் (மேலதிக விபரங்களுக்கு வர்த்தமானி அல்லது அறிவித்தலைப் பார்க்கவும்).

 சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றவராகவும், அலுவலகம் நடத்துவதற்குப் பொருத்தமான இடவசதி கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவங்களை யாழ். மாவட்ட செயலகத்திலோ அல்லது அந்தந்த பிரதேச செயலகங்களிலோ (Divisional Secretariat) பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, அந்தந்த பிரதேச செயலாளரிடம் அல்லது மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!