வாழ்வாதாரப் பாதிப்பால் விவசாயிகள் கவலை - பாதுகாப்பு கோரி கோரிக்கை.

#SriLanka #Lanka4 #Farmer #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
வாழ்வாதாரப் பாதிப்பால் விவசாயிகள் கவலை - பாதுகாப்பு கோரி கோரிக்கை.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் கால்நடைகளின் திருட்டு அதிகரித்து காணப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த ஒரு மாதத்திற்குள் 10 க்கும் அதிகமான பசு மாடுகள் மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலையில் காணாமல் போய்யுள்ளன. வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வந்த பசு மாடு ஒன்று கன்று ஈன்று மூன்று மாதம் ஆன நிலையில் மேய்ச்சலுக்காக கட்டி விடப்பட்டிருந்த நிலையில் காணவில்லை இதன் காரணமாக கால்நடை உரிமையாளர் குறித்த விடயம் தொடர்பாக தர்மபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றிணையும் பதிவு செய்துள்ளார் 

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது களவாடப்பட்ட கால்நடையை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்ததாகவும் நாள் ஒன்றுக்கு மூன்று லீற்றர் பாலினை அப்பசுவிலிருந்து பெற்று பாலினை விற்பனை செய்வதன் மூலமாக தமது வாழ்வாதாரத்தை ஓரளவு மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது மாடும் களவாடப்பட்டுள்ளது

இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாதிருக்க குறித்த விடையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் உரிய தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4