தனது குடும்பத்திற்காக 1972ம் ஆண்டு இத்தாலி விமானத்தை கடத்திய இலங்கையர்

#Flight #Arrest #Lanka4 #Italy #Bomb #Passenger #Kidnap #SriLankan #L4
Prasu
1 hour ago
தனது குடும்பத்திற்காக 1972ம் ஆண்டு இத்தாலி விமானத்தை கடத்திய இலங்கையர்

அம்பாந்தோட்டையை சேர்ந்த சேபால ஏக்கநாயக்க என்ற நபர் 1972ம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்றவர். அந்த காலத்தில் இலங்கை கடவுசீட்டுக்கு ஜெர்மனி விசா எடுக்க தேவையில்லை. டிக்கெட் மட்டும் செய்துகொண்டு பயணிக்கலாம். 

இரண்டாம் உலக யுத்தத்தில் மிகப்பெரும் மனித அழிவை எதிர்கொண்ட நாடு அது. ஆண்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்திருந்தது. அதனால் அந்த நாடு குடியேற்றவாசிகளுக்கு இந்த சலுகையை வழங்கியிருந்தது. 

இதை பயன்படுத்தி தான் இலங்கையை சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் ஜெர்மனிக்கு சென்றனர். இந்த சேபால ஏக்கநாயக்க ஜெர்மனி சென்ற பின்னர் இத்தாலிக்கு சென்றார் அங்குள்ள இத்தாலி பெண்ணோடு காதல் மலர்ந்தது.

இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்தது. இந்த காலக்கட்டத்தில் செபாலாவின் இத்தாலியின் தங்குமிட விசா முடிவுக்கு வந்தது. அவர் விண்ணப்பித்தபோது அவர்கள் இலங்கைக்கு சென்று இத்தாலி தூதரகத்தில் விண்ணப்பிக்க சொல்லியிருக்கின்றனர். 

அப்படி விண்ணப்பிக்கும்போது வதிவிட விசா கிடைக்க பல வருடங்களாகும் என தெரிந்து கொண்டார். இத்தாலி விசா கிடைக்க பல வருடங்கலாகும் என்று தெரிந்துகொண்டசேபால நேராக இந்தியாவுக்கு வந்து புதுடில்லியிலிருந்து இத்தாலி புறப்படும் அலித்தாலிய Alitalia Boeing 747 விமானத்தில் ஏறி பின்புற அமர்வில் இருந்துகொண்டார். 

images/content-image/1783461133.jpg

தனது பொதியில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட குண்டுகள் வயர்களை தனது உடலில் கட்டினார். அப்போது 35ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பாங்கொக் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.

விமானத்தின் பின்பக்கமிருந்து ஒரு குரலெழுந்தது தனது மனைவி மற்றும் மகனை தன்னிடம் ஒப்படைக்கவிட்டால் விமானம் சுக்கு நூறாகிவிடும் என அறிவித்தார். 

பயணிகள் கூக்குரலெழுப்ப தொடங்கினார்கள், விமானம் பாங்கொக்கில் தரையிறக்கப்பட்டது, இத்தாலி அரசு நேரடியாக அவரின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்தது. தனது குடும்பம் மற்றும் 3 லட்சம் டொலர் கப்பமாக வேண்டும் என்றார் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டது. பயணிகளும் விடுவிக்கப்பட்டனர். 

இறுதியாகத்தான் தெரியவந்தது அவர் உடலில் இருந்தது வெறும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் என்பது. அவர் நாடு திரும்பியபோது இலங்கையின் வீரர் என்று கொண்டாடி தீர்த்தார்கள் , விமான நிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

தனது குடும்பத்தை தனது ஊருக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சேபாலவை இலங்கை அரசு கைது செய்தது. மனைவியும் மகனும் இத்தாலிக்கு திரும்பினார்கள். இறுதியில் அவர் காலியில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைக்கு அனுப்பப்பட்டார். 

அவரைத் தங்கள் நீதிமன்றங்களில் விசாரிக்க இலங்கை புதிய சட்டத்தை இயற்றியதுடன், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேன்முறையீட்டின் பின்னர் அது 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இந்த சோபால ஏக்கநாயக்கத்தான் 83ம் ஆண்டு வெலிக்கடையில் தமிழ் சிறைக்கைதிகள் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் அதற்கு தலைமை தாங்கினார் என்பது இன்னொரு கதை. 1987ல் விடுதலையானார். பின்னாட்களில் இவர் இத்தாலியில் போதைப்பொருள் கடத்தியவர் என்று தெரியவந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4