முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லத்திற்கு அருகே ஆயுதத்துடன் இருந்த நபர் கைது
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லத்திற்கு அருகே, ஆயுதம் ஏந்தியபடி அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் அருகே நடந்த ஒரு சம்பவம் குறித்து அழைப்பு வந்ததை தொடர்ந்து, பொது ஒழுங்கு குற்றம் மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு சாண்ட்ரிங்ஹாம் பகுதியில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தனது நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த ஒருவர் அவரை மிரட்டியதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மவுண்ட்பேட்டன்-வின்ட்சரைக் கண்ட அந்த நபர், தனது காரில் அமர்ந்திருந்ததாகவும், பின்னர் வாகனத்திலிருந்து இறங்கி முன்னாள் இளவரசரை நோக்கிச் சென்று அவரை நோக்கிக் கத்தியதாகவும் டெய்லி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )