கனடாவில் கொலை குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது

#Arrest #Canada #Murder #Youngster #lanka4.com #L4
Prasu
4 hours ago
கனடாவில் கொலை குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், புராக்வில் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கார்டியர் கோர்ட் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் மூன்று சடலங்களைக் கண்டெடுத்தனர்.

அந்த இடத்திலிருந்த ஆதாரங்களின் அடிப்படையில் நகரின் வெளிப்பகுதியில் இருந்த மற்றொரு முகவரியிலிருந்து குறித்த சிறுவனைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளும், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கும் குறித்த சிறுவனுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இருந்ததாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!