மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (09) மாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைச்சேனை மற்றும் இக்பால் வீதி ஆகிய பகுதிகளில் வைத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
35 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 30 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )