”ஜோசப் விஜய் எனும் நான்” : முதல்வராக பதவியேற்கும் விஜய்!

#SriLanka #Tamil Nadu #Minister #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
”ஜோசப் விஜய் எனும் நான்” :  முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இருப்பினும் ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளை கொண்டிருக்கவில்லை. 

இந்நிலையில்  காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன. இதனையடுத்து 120 தொகுதிகள் கிடைக்கப்பெற்றது. 

இதனையடுத்து ஆளுநரிடம் இதற்கான கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இன்று பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்கிறார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். தவெக தரப்பில் செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல்குமார், அருண்ராஜ், வெங்கடரமணன், காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

 இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

 விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை 11 ஆம் திகதி பதவியேற்கின்றனர். தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4