திருகோணமலையில் சிசு உயிரிழந்த விவகாரம் - இரு வைத்தியர்கள் பணியிடை நீக்கம்!

#SriLanka #Trincomalee #Hospital #doctor #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
திருகோணமலையில் சிசு உயிரிழந்த விவகாரம் - இரு வைத்தியர்கள் பணியிடை நீக்கம்!

திருகோணமலையில் பிரசவத்தின்போது சிசு உயிரிழந்தமை தொடர்பில் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

இவ் விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சகம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேற்படி பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, அந்த இரண்டு வைத்தியர்களையும் பிரசவ அறைக்கு வருமாறு கோரி வைத்தியசாலையின் விடுதி பெண் வைத்தியர் 6 முறை தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்திய போதிலும், அவர்கள் அந்த நேரத்தில் அங்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

அவ்விரு வைத்தியர்களும் சம்பவ தினத்தன்று தனியார் மருத்துவமனையொன்றில் கருப்பை அறுவை சிகிச்சையொன்றில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சுகாதார அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

 விசாரணைகளில் கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், கடமை நேரத்தில் சேவையைப் புறக்கணித்து முறையற்ற விதத்தில் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்த இரண்டு வைத்தியர்களின் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!