சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்: 5,000 ரூபா மேலதிக உர மானியம்!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்: 5,000 ரூபா மேலதிக உர மானியம்!

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு தலா 5,000 ரூபா மேலதிக மானியம் வழங்கப்படவுள்ளது. இதற்கான நிதி திறைசேரியிலிருந்து ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல், கப்பல் கட்டண உயர்வு மற்றும் கடல்சார் காப்புறுதிச் செலவுகள் அதிகரிப்பால் உரத்தின் விலை உயர்ந்துள்ளமை.

விலை அதிகரிப்பினால் தேயிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைத்து, தடையின்றி உர விநியோகத்தை உறுதிப்படுத்துதல்.

ஏற்கனவே நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் திட்டத்தைப் போன்றே இதுவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. "உலகளாவிய ரீதியில் உரத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையிலுள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு தலா 5,000 ரூபா மேலதிக மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விசேட நிதியை திறைசேரி ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்."

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4