அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐதராபாத் பெண்
#Death
#Women
#America
#Lanka4
#Indian
#L4
Prasu
1 day ago
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 28 வயது ஸ்ரீவீணா மற்றும் பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இருவரும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீவீணா கடந்த 2 நாட்களுக்கு முன் புளோரிடா சென்றார்.
அப்போது அங்குள்ள ஒரு நீச்சல் குளத்தில் ஸ்ரீவீணா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தனது மகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீவீணாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை நடைபெறுவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )