கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல்

#SriLanka #Meeting #Kilinochchi #people #Lanka4 #land
Prasu
1 month ago
கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல்

இன்று கிழக்கு மாகாண நிலமீட்பு நடவடிக்கை குழுவினருக்கும் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகம் மற்றும் தமிழ்தேசிய செயற்பாட்டாளர்கள் இடையிலான விசேட கலந்துரையாடல் கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இதன் போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலவளங்கள் மற்றும் அதன் பரப்பளவு தொடர்பிலும் அது தொடர்பில் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சிவில் சமூகமாக அந்த நடவடிக்கைகளில் தன்னார்வமாக செயல்படுபவர்கள் குறித்தும் அத்தகைய செயல்பாடு ஒன்றின் அவசியம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. 

images/content-image/1778698078.jpg

விசேடமாக வடக்கு கிழக்கு மலையகம்இணைந்த வகையில் மக்களின் காணி ஆக்கிரமிப்புகள் குறித்தும் 5 தசாப்தங்களுக்கு மேலாக குடியிருக்கும் காணி உரிமையாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்காது தவிர்த்து வருவது குறித்தும் பௌத்த தொல்லியல் ஆக்கிரமிப்புகள் குறித்தும் அதற்கு அதிகாரிகள் சிலரின் ஒத்திசைவு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

முடிவில் வடக்கு கிழக்கு மலையகம் இணைந்த வகையில் காணி மீட்பிற்கான பரந்த செயலணியை உருவாக்குவது என்ற கொள்கை ரீதியான இறுதி தீர்மானத்துடன் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

இதற்காக வருகை தந்திருந்த திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறையைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் தமிழ் பேசும் சகோதரர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4