சம்பூர் மகா வித்தியாலயத்திற்கு புதிய இரு மாடி கட்டிடம்: ரூ. 16 மில்லியன் செலவில் பணிகள் ஆரம்பம்
மூதூர் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திட்ட விபரங்கள்: முதற்கட்ட நிதி ஒதுக்கீடு: ரூ. 16 மில்லியன் (முதலாம் மாடிக்காக). இரண்டாம் கட்டம்: அடுத்த மாடிக்கான நிதி ஒதுக்கீடு விரைவில் மேற்கொள்ளப்படும்.
அடிக்கல் நாட்டி வைத்தவர்கள்: கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் இணைந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்: பாடசாலை அதிபர் புண்ணியமூர்த்தி பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், எஸ். ஆர். ஹசந்தி - கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர். எ.எல்.சிராஜ் - மூதூர் வலய கல்விப் பணிப்பாளர்.
தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.ஆர்.எம். சப்ரான். வலயக் கல்வி அலுவலகப் பிரதி பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள்.
கல்வி வளர்ச்சியில் புதிய மைல்கல்!
இந்த புதிய கட்டிட வசதி மூலம் சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் சூழல் மேம்படுவதுடன், பிரதேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் இது ஒரு முக்கிய அங்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
(வீடியோ இங்கே )