பெண் பயணிக்கு தொல்லை கொடுத்த பேருந்து நடத்துனர் அதிரடி கைது.
பெண்கள் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறி! மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண் ஒருவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் மக்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதுடைய பெண் ஒருவர் பேருந்தில் நின்றுகொண்டு பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த பேருந்தின் நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த பெண் வீட்டிற்குச் சென்று தனது கணவரிடம் சம்பவத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
புகாரைப் பெற்ற மொனராகலை பொலிஸார் விரைவாக செயல்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்!
கைது செய்யப்பட்டவர்: ▪️ வயது – 34 ▪️ பகுதி – மொனராகலை, சிறிங்கல கீழ் பகுதி தற்போது குறித்த நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
“பெண்களின் பாதுகாப்பு பொதுப் போக்குவரத்திலும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம்” என சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )