சூரிச் மற்றும் பெங்களூரு இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்
#Flight
#Switzerland
#Lanka4
#service
#Bengaluru
#Zurich
#L4
Prasu
2 hours ago
சுவிஸ் சர்வதேச விமான சேவை, பெங்களூரு மற்றும் சூரிச் இடையே ஒரு புதிய நேரடி விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது.
இந்தப் புதிய வழித்தடம், 2026 அக்டோபர் 25 முதல் 2027 மார்ச் 27 வரை இயக்கப்படும் என்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள இடங்களுக்குத் தொடர் பயணச் சேவையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பெங்களூரிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல விரும்பும் பயணிகள் துபாய், கத்தார் அல்லது ஜெர்மனி வழியாக விமானம் மாறி தான் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம், பயணிகள் எங்கும் இறங்கி மாறாமல் பெங்களூருவிலிருந்து 9 மணி நேரத்தில் சுவிட்சர்லாந்தை சென்றடைய முடியும்.
(வீடியோ இங்கே )