காசா மக்களுக்கு உதவ சென்ற இலங்கை பெண் விடுதலை

#Arrest #Women #Israel #Lanka4 #release #Turkey #SriLankan #extradite
Prasu
1 month ago
காசா மக்களுக்கு உதவ சென்ற இலங்கை பெண் விடுதலை

இஸ்ரேலிய இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்த சமீரா மஹ்பூப்தீன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.

பலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு உதவும் வகையில், சர்வதேச தன்னார்வலர்கள் சிலர் கப்பல் மூலமாக காசா பகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அதன்போது இலங்கையரான சமீராவும் ஒரு துணை மருத்துவப் பணியாளராக அவர்களுடன் சென்றிருந்தார். அவர்கள் பயணித்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய ராணுவத்தினரால் கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீரா மஹ்பூப்தீன் இஸ்ரேலிய இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து துருக்கிக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4