பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்

#India #Tamil Nadu #Delhi #Lanka4 #Vijay #ChiefMinister #Visit #NarendraModi
Prasu
1 month ago
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்

முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்தும் நோக்கில் தமிழக முதல்வர் விஜய், அடுத்த வாரம் டெல்லிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

இந்த பயணத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை விஜய் சந்திக்கவுள்ளார்.

அடுத்த வாரம் டெல்லி செல்லும் முதல்வர் விஜய், முதலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க உள்ளார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளார்.

தமிழக அரசின் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4