வெற்றிகரமாக நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதியின் மருத்துவ பரிசோதனை

#America #Lanka4 #President #L4 #DonaldTrump
Prasu
3 hours ago
வெற்றிகரமாக நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதியின் மருத்துவ பரிசோதனை

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப், மேரிலாந்தில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பரிசோதனை சிறப்பாக நடந்து முடிந்ததாக டிரம்ப், குறிப்பிட்டுள்ளார்.

"வால்டர் ரீட் இராணுவ மருத்துவ மையத்தில் எனது 6 மாத உடல் பரிசோதனையை இப்போதுதான் முடித்தேன். அனைத்தும் மிகச் சரியாக இருந்தன" என்று 79 வயதான டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டிருந்தார். 

மேலும், மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகள் அல்லது நடைமுறைகள் குறித்த விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிடுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!