பிரித்தானியாவில் காணாமல் போன 12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

#Death #Lanka4 #heat #England #Youngster #Missing #L4
Prasu
1 hour ago
பிரித்தானியாவில் காணாமல் போன 12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் வெப்ப காலநிலைக்கு மத்தியில் ரிப்ஸ்டர் பகுதியில் ஓடும் ரிபிள் ஆற்றில் நீராட சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய நண்பர்களுடன் சிறுவன் ஜூனியர் ஸ்லேட்டர் ஆற்றில் நீந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஜூனியர் ஸ்லேட்டர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக லங்காஷயர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நீரில் மூழ்கிய சிறுவனை கண்டுபிடித்தனர். 

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள் காரணமாக, நாட்டில் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் இது போன்ற துரதிர்ஷ்டமான சம்பவங்கள் அரங்கேறி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!