கிழக்கு லண்டனில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
கிழக்கு லண்டனின் பெருநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தேசிய கல்விச் சங்கம்(NEU) மேற்கொண்டு வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக, பெற்றோர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளன.
கடந்த வாரம் வால்தம்ஸ்டோ நகரில் உள்ள South Grove ஆரம்பப் பள்ளி , ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டது.
பள்ளிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப்பு மறுசீரமைப்பு காரணமாகப் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான ஆதரவு மற்றும் உதவிகள் குறையும் என்ற அச்சத்தினால் ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆசிரியர்களின் இந்த நடவடிக்கைக்குப் பெற்றோர்களில் ஒரு தரப்பினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெற்றோர்களும் குழந்தைகளும் இணைந்து வால்தம்ஸ்டோ நகர சபைக்கு வெளியே தங்களின் எதிர்ப்பை ஊர்வலமாகப் பதிவு செய்தனர்.
(வீடியோ இங்கே )