காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீள ஆரம்பம்!

#India #SriLanka #Kangesanthurai #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீள ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன்  வெளியிட்டுள்ளார். 

கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பல் பழுதடைந்ததை அடுத்து, அதன் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

 தற்போது பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை முதல் வழமைப்போல் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார். 

இச்சேவையானது வழமை போல் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயணச் சீட்டுக்ளை பெற்றுக்கொள்ள  www.sailsubham.com என்ற இணையதளத்தின் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4