பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய கே. அண்ணாமலை

#India #Resign #Lanka4 #Politician #Politics #L4
Prasu
2 hours ago
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய கே. அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, டெல்லியில் தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து தனது விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.

இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்குள் "மதச்சார்பற்ற" மற்றும் "தமிழ்நாடு முதன்மை" என்ற கொள்கைகளுடன் ஒரு புதிய மாநிலக் கட்சியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாஜக தேசிய தலைவரிடம் அண்ணாமலை 5 பக்க கடிதத்தை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தனது அதிருப்திக்கான காரணங்களை விவரித்துள்ளதாக அறியப்படுகிறது.

ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து கே. அண்ணாமலை 2020 ஆகஸ்ட் 25 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி. முரளிதர் ராவ் ஆகியோர் முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!