இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும். விரும்பியவர் தேடி வருவர். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உடல் நலம் பலம் பெறும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்
உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். சோர்வும் களைப்பும் நீங்கும் நாள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. விட்டுப் போன நட்பை தொடர்வீர்கள்.
கடகம்
பணவரவுக்கு பஞ்சமில்லை. கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
பணப் புழக்கம் மிகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
கன்னி
மாணவர்கள் மேற்படிப்புக்கு ஆயத்தம் ஆவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. சாதகம் மிகுந்த நாள். பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.
துலாம்
சுபச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். திருமணம் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும்.
விருச்சிகம்
வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள்‘ விலகும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிபூர் பயணம் வெற்றி தரும். மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர்.
தனுசு
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தான் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள். பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணம் மேற்கொள்வர். வியாபாரம் சாதகமாக இருக்கும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும்.
மகரம்
தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். தோல்வி பயம் நீங்கும். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்குகள் வெற்றி பெற்று தங்கள் புகழ் ஓங்கும். உறவினருடன் விடுமுறையைக் கழித்து வீடு திரும்புவீர்கள். யாருக்கும் பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகும். தேகம் பளிச்சிடும்.
மீனம்
தம்பதிகளிடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )