சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பான புதிய புள்ளிவிபரங்கள் வெளியீடு!

#Switzerland #LANKA4 #Living #SriLankan
Mithra
4 hours ago
சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பான புதிய புள்ளிவிபரங்கள் வெளியீடு!

சுவிட்சர்லாந்தில் அகதிகளாகவும், அகதி நடைமுறையின் கீழ் உள்ளவர்களாகவும் மொத்தம் 5,829 இலங்கையர்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்திற்கான அரச செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, 4,393 இலங்கையர்கள் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளாகவும், 1,436 பேர் அகதி நடைமுறையின் கீழ் உள்ளவர்களாகவும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டின் இறுதியில் 4,616 ஆகக் காணப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட இலங்கை அகதிகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டில் 223 பேரால் குறைவடைந்துள்ளது.

மேலும், சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளின் மொத்த எண்ணிக்கை 94,261 ஆகப் பதிவாகியுள்ளது. நாட்டுவாரியான அடிப்படையில் எரித்திரியா, சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அத்துடன், 2025ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 25,781 புதிய அகதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.1 சதவீத வீழ்ச்சியாகும்.

எனினும், இந்தப் புள்ளிவிபரங்கள் சுவிட்சர்லாந்தில் வாழும் ஒட்டுமொத்த இலங்கையர்களின் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!