கனடாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட உள்ள தடை

#Canada #children #Banned #Drinks #lanka4Media #L4
Prasu
11 hours ago
கனடாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட உள்ள தடை

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சக்தி பானங்களை(Energy Drink) விற்பனை செய்வதைத் தடை செய்யும் புதிய மசோதாவை கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதாவிற்கு தேசிய அவையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

எனினும், கடந்த மார்ச் மாதம் முதல் கியூபெக் கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்துள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான மிட்டே பிளான்ஷெட் வெசினா மட்டும் இதற்கு ஆதரவளிக்கவில்லை.

விரைந்து சட்டமாக்க முயற்சி வரும் ஜூன் 12ம் திகதியுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளதால், அதற்குள் இந்த சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவையாக உள்ளது.

மசோதா உருவானதன் பின்னணி கடந்த 2024ம் ஆண்டு, சக்கரி மிரோன் என்ற 15 வயது சிறுவன், தான் உட்கொண்டு வந்த ஏடிஹெச்டி சக்தி பானத்தை குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவனது பெற்றோரின் தொடர் போராட்டத்தின் விளைவாகவே இந்த 'மசோதா 9' (Bill 9) தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.

இளைஞர்களின் ஆரோக்கியத்தில் சக்தி பானங்கள் ஏற்படுத்தும் தீமைகளைத் தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!