நீர்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் இருந்து 63 சதவீதமான நீர் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரை முறையாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பின்படி, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு தற்போது அம்பாறையில் 41%, அனுராதபுரத்தில் 81%, பதுளையில் 74%, மாத்தளையில் 49%, காலியில் 72%, கண்டியில் 93%, குருநாகலையில் 86%, மொனராகலையில் 76%, பொலன்னருவாவில் 71%, புத்தளத்தில் 93%, திருகோணமலையில் 68% மற்றும் மன்னாரில் 76% ஆக உள்ளது.
இருப்பினும், வரும் வாரங்களில் மழைப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களும் விவசாய சமூகத்தினரும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே )
