சுவிட்சர்லாந்தில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட ஜெர்மனி நாட்டவர் மரணம்
செயின்ட் கேலன் மாகாணத்தில் உள்ள வாட்டிஸ் என்ற இடத்தில், விங் சூட் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 47 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுமார் 2,080 மீட்டர் உயரத்தில் உள்ள சூஃபாட் பகுதியில், 37 வயதான மற்றொருவருடன் அந்த நபர் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
தொடங்கிய சிறிது நேரத்திலேயே விபத்து நேர்ந்து உயிரிழந்துள்ளார் என்று செயின்ட் கேலன் மாகாண காவல்துறை தெரிவித்தது.
விபத்திற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. அந்த நபரின் உடல் ரெகா ஹெலிகாப்டர் மீட்பு சேவையால் மீட்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )