பேருந்து கட்டணங்கள் மீண்டும் 20 சதவீதத்தால் உயரும் - கெமுனு விஜேரத்ன திட்டவட்டம்!
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைய இந்த மாதத்தின் இறுதியில் எரிபொருட்களின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அடுத்த மாதத்தில் பேருந்தின் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 ரூபாயைத் தாண்டுவது உறுதி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடங்களுக்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், பேருந்து கட்டணத்தை உடனடியாக உயர்த்துவதற்கு அரசாங்கம் இணங்காததால், பேருந்து உரிமையாளர்களின் நஷ்டத்தைக் குறைக்கும் நோக்கில் நாளாந்த பயணக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படவுள்ளது.
இதன்படி, அலுவலக நேரங்கள் மற்றும் பாடசாலை நேரங்களிலான பேருந்து சேவைகள் எவ்வித மாற்றமுமின்றி வழமை போல் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே