கிளிநொச்சியில் சோகம்: கடைச்சல் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு!
புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் (Lathe Workshop) இன்று காலை வழக்கம் போல் சிவகுருநாதன் சாரங்கன் (வயது 23) பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அவர் மீது பலத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்ததை அடுத்து, அங்கிருந்த ஏனைய தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இளைஞனின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடைச்சல் தொழிலகத்தில் முறையான மின் பாதுகாப்பு வழிமுறைகள் (Safety measures) பின்பற்றப்பட்டதா அல்லது மின் இணைப்புகளில் ஏதேனும் அலட்சியப்போக்குக் காணப்பட்டதா என்பது தொடர்பிலும், மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்தும் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே